உள்ளூர் செய்திகள் (District)

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தாய் - சேய் நல வாகன சேவை - எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்

Published On 2022-09-25 06:36 GMT   |   Update On 2022-09-25 09:04 GMT
  • ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு போக சிரமமாக இருப்பதாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணனிடம் பொதுமக்கள், தாய்மார்கள் மனு அளித்தனர்.
  • தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல ஊர்தி சேவையை கண்ணன் எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார்.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்கு வரும் தாய்மார்கள் மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கு செல்ல சிரமமாக இருப்பதாக ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணனிடம் பொதுமக்கள், தாய்மார்கள் மனு அளித்தனர்.

மேலும் தலைமை மருத்துவர் டாக்டர் உஷா தாய் சேய் வாகனம் தேவை என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தார்.

அதன் அடிப்படையில் தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல ஊர்தி சேவையை கண்ணன் எம்.எல்.ஏ. துவங்கி வைத்தார்.

மேலும் மருத்துவமனையில் அனைத்து வார்டுகளிலும் சென்று நோயாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் சரியான முறையில் நோயாளிகளுக்கு கிடைக்கிறதா என ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதில் மருத்துவர்கள் செந்தில்குமார், ராஜா, கீதா நவீன் குமார் மற்றும் செவிலியர்கள் திமுக நகர செயலாளர் கருணாநிதி கவுன்சிலர் புகழேந்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News