- அடைக்கல அன்னை ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது
- ஓசன்னா கீதங்கள் பாடியபடி கைகளில் குருத்தோலை ஏந்தி பவனி நடைபெற்றது
திருமானூர்,
இயசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிர்நீத்த தினம் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பாஸ்கா விழாவில் பங்கேற்க பெத்தலஹோம் நகரில் நுழைந்த இயேசுவை, யூதர்களின் ராஜாவாக அறிவித்து, அவரை மக்கள் கைகளில் ஆலிவ் இலை ஏந்தி வரவேற்றனர். இந்நாளை நினைவு கூரும் வகையில் குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.அதன்படி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்காவலூர் என்று அழைக்கப்பட்ட ஏலாக்கு றிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள தேவாலயங்களில் தவக்காலமான கடைசி ஞாயிறு குருத்தோலை பவணி ஊர்வலம் நடைபெற்றது.அப்போது குருத்தோலைகளை கைகளில ஏந்தியவாறு ஓசானா பாடல் பாடிவாறு கிறிஸ்தவர்கள் சென்றனர். ஏலாக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்தில் ஒரு குருத்தோலைகள் மந்திரிக்கப்பட்ட ஜெபம் செய்து ஊர்வலமாக சென்று ஆலயத்தை அடைந்தனர். இந்த நாளை ஒட்டி திருமானூர் மற்றும் ஏலாக்குறிச்சி ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குதந்தை அதிபர் தங்கசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதத்தினர் கலந்துகொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகளைப் பாடி பவனியாக வீதி உலா வந்தனர்தவக்காலத்தின் முக்கிய நாட்களான பெரிய வியாழன் வரும் 6-ந் தேதியும், புனித வெள்ளி வரும் 7-ந் தேதியும் கடைப்பிடி பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது.