உள்ளூர் செய்திகள் (District)

சட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2023-03-15 07:06 GMT   |   Update On 2023-03-15 07:06 GMT
  • காப்பீடு இல்லாத வாகனத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் நஷ்ட ஈடு ெபற முடியாது
  • அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தகவல்

அரியலூர்,

அரியலூர் அருகே ராயம்புரம் திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான மகாலட்சுமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தயங்காமல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரில் அனுகினால் இரு தரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து சுமூகமாக தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படும்.ஆனால் குற்றவியல் வழக்குகளுக்கு இது பொருந்தாது. குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு இலவசமாக வழக்கறிஞர் வைத்து தரப்படும். மூத்த குடிமக்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் அவ்வாறு பராமரிக்க தவறினால் சட்டம் தன் கடமையை செய்யும். சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. காப்பீடு இல்லாத வாகனங்களில் குறிப்பாக லாரி மூன்று சக்கர ஆட்டோ ஆகிய வாகனங்களில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால், நஷ்ட ஈடு பெற இயலாது.பெற்றோர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும்போது சொத்துக்களை தங்களது பிள்ளைகளுக்கு மாற்றம் செய்வது தவிர்க்க வேண்டும் நீதிமன்றங்கள் இந்த மாதிரி வழக்குகள் நிறைய வருகின்றன. ஏனெனில், பிள்ளைகள் தங்களது பெயருக்கு சொத்து மாற்றம் செய்யப்பட்டவுடன் பெற்றோர்களை கவனிப்பதில்லை. பெண் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை முன் பின் தெரியாத நபர்களிடம் விடக்கூடாது. குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே பாலியல் பாலியல் புரிதல் பற்றிய கல்வி முறையை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும். குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால் தயங்காது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவினை நேரில் அணுகலாம்.சட்ட விரோதமாக ஆசிட் உற்பத்தி ெசய்பவர்களை தண்டிக்க டுமையான சட்டங்களை இயற்ற ே வண்டும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News