உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

Published On 2023-02-14 05:14 GMT   |   Update On 2023-02-14 05:14 GMT
மனு கொடுக்க வந்தவர்கள் திடீர் போராட்டம்

அரியலூர்,

அரியலூர் கலெக்டரிடம் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர், 23 பேர் மனு அளிக்க சென்றனர். அப்போது அவர்கள், அரசு அதிகாரிகளும், வியாபாரிகளும் சேர்ந்து, சின்டிகேட் அமைத்து பருத்தி விவசாயிகளை ஏமாற்றி வருவதை தமிழக முதல்வர் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருத்திக்கு உரிய விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு, கைகளில் பருத்தியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார். பின்னர் கோரிக்கை மனுவை அளிக்க ஆட்சியரக கூட்டரங்கிற்குச் சென்றனர். அங்கு, அவர்களை, சிறிது நேரம் காத்திருக்குமாறு ஆட்சியர் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரையும் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Tags:    

Similar News