அரியலூரில் தூய்மைக்கான மக்கள் விழிப்புணர்வுப் பேரணி
- அரியலூரில் தூய்மைக்கான மக்கள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது
- பேரணியானது, பிரதான கடைவீதி மற்றும் தெரு வழியாகச் சென்று, நகாட்சி அலுவலகத்தில் நிறைவ டைந்தது.
அரியலூர்:
அரியலூரில், தூய்மைத் திருவிழா மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.சத்திரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், தூய்மைப் பணியாளர்களின் விழிப்புணர்வுப் பேரணி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.பேரணியானது, பிரதான கடைவீதி மற்றும் தெரு வழியாகச் சென்று, நகாட்சி அலுவலகத்தில் நிறைவ டைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட தூய்மைப் பணியாளர்கள், குப்பைகளை பொது வெளியில் கொட்டி உங்களது தெருக்களையும் நகரத்தையும் அசுத்தமாக்க வேண்டாம், நெகிழிப் பொருள்களை சாலையில் போடுவதால் ஏற்படும் பிரச்னைகள், தூய்மையான இடம் இறைவன் குடியிருக்கும் இடமாகும் என்று வலியுறுத்தி விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் தமயந்தி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.