உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் நடைபெற்ற மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டியில் சாதனை படைத்த மாணவிகள்

Published On 2023-01-22 06:46 GMT   |   Update On 2023-01-22 06:46 GMT
  • அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் நடைபெற்ற மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டியில் மாணவிகள் சாதனை படைத்தனர்
  • இதில் 38 மாவட்டத்தை சார்ந்த 198 மாணவ, மாண–விகள் கலந்து கொண்டனர்.

அரியலூர்:

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக மாநில அளவிலான சைக்கிள் போட்டி அரியலூர் மாவட்ட கல்வி துறையின் சார்பாக கீழப்பழுவூரில் காலை 7.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தை சார்ந்த 198 மாணவ, மாண–விகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயது மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற்றது.

போட்டியை திருமானூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி சக்கரவர்த்தி, கீழப்பழுவூர் ஊராட்சி மன்றத்தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, பாஸ்கர், கோவிந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத் தனர். இந்நிகழ்ச்சியில் அரி–யலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலு–வலர் விஜயலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உத–வியாளர்கள் ராஜப்பிரி–யன், குணசேகரன், பள்ளித் துணை ஆய்வாளர்கள் பழனிச்சாமி, செல்வக் குமார், சரவணன், முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

போட்டி ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் அருண்மொழி, ரமேஷ், திருமூர்த்தி, சேகர், கண்ணன் ஆகியோர் செய்தி–ருந்தனர்.போட்டியில் வெற்றி–பெற்ற–வர்கள் விபரம் வருமாறு:- 14 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் மதுரை அரசு பள்ளி மாணவி பானுஸ்ரீ முதலிடமும், கோவை கோடாநத்தம்பட்டி பள்ளி மாணவி சாதனாஸ்ரீ இரண்டாமிடமும், சிவ–கங்கை பாலாம்பட்டி அரசு பள்ளி மாணவி மதுமிதா 3-ம் இடமும் பெற்றனர்.

17 வயதுக்கு உட்பட் டோருக்கான மாணவிகள் பிரிவல் கோவை பள்ளி மாணவி கார்த்தியாயினி முதலிடமும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சுவாதிகா இரண்டாமிடமும், கரூர் பசுபதிபாளையம் பள்ளி மாணவி ரமணி மூன்றாமி–டமும் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட் டோர் மாணவிகள் பிரி–வில் புதுக்கோட்டை பள்ளி மாணவி கோகிலா முதலிடமும், தஞ்சாவூர் அய்யம்பேட்டை பள்ளி மாணவி கீர்த்தனா இரண்டாமிடமும், கரூர் பஞ்சம்பட்டி பள்ளி மாணவி ஜனனி மூன்றாமிடமும் பெற்றனர்.

Tags:    

Similar News