உள்ளூர் செய்திகள் (District)

பெண்களுக்கு சிறப்பு சித்த மருத்து முகாம்

Published On 2023-03-06 03:35 GMT   |   Update On 2023-03-06 03:35 GMT
  • 8ம் தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்
  • பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ளது

அரியலூர்,

பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு ஏற்படும் உடல் நோய்கள், மன நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் பொருட்டு வருகிற புதன்கிழமை வரும் 8ம் தேதி அன்று திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அனைத்து அரசு சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, இயற்கை, யோகா மருத்துவ பிரிவு மருத்துவ முறைகளில் பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது!திருச்சி, கரூர், அரியலூர், ஆகிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரையிலும், பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஊரக சித்த மருத்துவமனைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் இச்சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறும்.இம்முகாமில் தைராய்டு நோய், மாதாந்திர தீட்டு பிரச்சினை, சினைப்பை நீர்க்கட்டி, கருப்பை கட்டி, புற்றுநோய் கட்டி, குழந்தையின்மை, உடல் பருமன், மூட்டு வலி, இரத்த சோகை, சர்க்கரை நோய், இதய நோய், இரத்த கொதிப்பு நோய், ஆஸ்துமா, மார்பகக்கட்டி, மூலம், பெளத்திரம், முடி உதிர்தல், பொடுகு, வயிற்று புண்கள் போன்றவற்றிற்கு சிறப்பு ஆலோசனை மற்றும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும் என்று திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர்மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்சா.காமராஜ் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News