உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-10-17 06:31 GMT   |   Update On 2023-10-17 06:31 GMT
  • அரியலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
  • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்துக்கு, கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பெற்ற 434 கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக அவர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,900 மதிப்பில் தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,552 மதிப்பில் பித்தளை சலவைப் பெட்டி என மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ.24,904 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து 2022-2023-ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற அகில இந்திய தேர்வில் மெக்கட்ரானிக்ஸ் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று கேடயம் பெற்ற மாணவி நித்யா மற்றும் மாணவர் சந்தோஷ் ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், அவர், ஆட்சியரக அலுவலகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்தில் பயிற்சி மேற்கொண்ட கூவத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கலைவாணி, தனித் துணை ஆட்சியர் இளங்கோவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், தேசிய தகவலியல் மையத்தின் மாவட்ட அலுவலர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News