புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு விஷ சாராயம் கடத்தியவர் கைது: 300 லிட்டர் சாராயம்-கார் பறிமுதல்
- போலீசார் , சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதிலிருந்து ஒரு நபர் தப்பி ஓட முயன்றார்.
- போலீசார் அவரை மடக்கி பிடித்து காரை சோதனை செய்தனர்.
விழுப்புரம்:
புதுவையில் இருந்து சாராயம் கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. அதையடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னக் கமணன் தலைமையான போலீசார் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்தற்ககிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதிலிருந்து நபர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 300 லிட்டர் விஷ எரிச்சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திண்டிவனம் கலால் துறையிடம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.
இதையடுத்து திண்டிவனம் கலால் துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து புதுவை மாநிலத்தை சேர்ந்த கவிநீலவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது சம்பந்தமாக கலால் டி.எஸ்.பி. பழனி விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் கவிநீலவனிடம் இருந்த 300 சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 8 லட்சம் மதிப்பிலான கார் பறிமுதல் செய்ய ப்பட்டது. கலைநீலவன் புதுவையில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து தமிழகப் பகுதியில் விற்பனை செய்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.