கொடைக்கானலில் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை அபகரித்தவர் கைது
- போலியாக ஆவணங்கள், ஆதார் அட்டை, கேரளா முகவரி உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்து நிலத்தை மோசடி கணவன்-மனைவி மீது புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் நிலமோசடியில் ஈடுபட்டவரை கைது செய்து அவரது மனைவியை தேடி வருகின்றனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதிைய சேர்ந்தவர் சகீம். இவருக்கு சொந்தமான 5.26 ஏக்கர் நிலம் அதேபகுதியில் உள்ளது. இந்நிலையில் வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையை சேர்ந்த முத்துராமலிங்கம்(65) என்பவர் சகீம் என்பவரது பெயரிலேயே போலியாக ஆவணங்கள், ஆதார் அட்ைட, கேரளா முகவரி உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்தார்.
கடந்த மாதம் 15-ந்தேதி நிலத்தை தனது பெயரில் பதிவு செய்து கொண்டார். இதற்கு அவரது மனைவி சாந்தி(56) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த ஆவணங்களை கொடைக்கானல் சார்பதிவாளர் விஸ்வநாதன் சரிபார்த்தபோது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிலத்தை மறுபடியும் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் சார்பதிவாளர் விஸ்வநாதன் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து போலீசார் கணவன்-மனைவி இருவர் மீதும் வழக்குபதிவு செய்து முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர்.