உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் இருந்து தஞ்சைக்கு 1300 டன் உரம் வருகை
- 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
- தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொ ருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து 1300 டன் யூரியா, காம்ப்ளக்ஸ், டிஏபி உரங்கள் சரக்கு ரயிலில் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது.
பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் உள்ள தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதே போல் தஞ்சையில் இருந்து கன்னியாகுமரிக்கு பொது விநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக 1250 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.