மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி
- வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நடனம், மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முகம், வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அனிதாகுமாரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் நடனம், மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.
விழாவில் ஒருங்கிணைப்பாளர் ராஜா, ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வதி, செல்வராணி, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் பெரியசாமி, மகேஸ்வரி, கவிதா, இயன்முறை மருத்துவர் மலர்விழி, பள்ளி ஆயத்த முகாம் ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.