உள்ளூர் செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடக்க விழா

Published On 2023-09-18 08:58 GMT   |   Update On 2023-09-18 09:01 GMT
  • 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.
  • இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் நந்தினி ஸ்ரீதர், காமாட்சி மூர்த்தி, பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கிவைத்து, பயனா ளிகளுக்கு திட்டத்தின் வங்கி கணக்கு பற்று அட்டை வழங்கி பேசினார்.

அப்போது அமைச்சர் பேசியதாவது: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடும் விதமாக, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1 கோடியே 6 லட்சம் மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் போன்ற பல திட்டங்கள் மூலம் பெண்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் 39 லட்சத்து 40 ஆயிரம் பேர் முதியோர் உதவித்தொகை, அமைப்புசாரா தொழி லாளர் உதவித்தொகை என மாதம் ரூ.1200 வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் நேரடி யாக 1 கோடியே 45 இலட்சம் குடும்பங்கள் பயன்பெற்ற வருகின்றனர்.

ஆகவே, சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என அமைச்சர் பேசினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் பேசியதாவது:

நமது மாவட்டத்தில் கலைஞர் உரிமைத்திட்டம் விண்ணப்பங்கள் வழங்க இரு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்யப்பட்டது.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி மேகலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுக வினர் கலந்து கொண்டனர்.

முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கண்மணி நன்றி கூறினார்.

Tags:    

Similar News