உள்ளூர் செய்திகள்

கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்ற காட்சி.

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-11-25 09:38 GMT   |   Update On 2022-11-25 09:38 GMT
  • கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.
  • நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி மடத்து விளை புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.

ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், சிங்கித்துறை பங்குத்தந்தை ஷிபாகரன், பெரியதாழை துணை பங்கு தந்தை கிங்ஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துவிளை ஊர் நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் தினசரி திருப்பலி, மறையுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2- வது நாளான புனித வின்சென்ட் தே பவுல் மற்றும் மரியாவின் சேனையாளர்கள் சார்பில் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து பத்து நாள் திருவிழாவில் இளையோர் தினம், திருமணமானவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை அலாசியஸ் அடிகளார் மற்றும் மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News