உள்ளூர் செய்திகள் (District)

அரூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் மூலம்ஓராண்டில் அபராதமாக ரூ.17.16 கோடி வசூல்

Published On 2023-01-10 09:43 GMT   |   Update On 2023-01-10 09:43 GMT
  • அபராதம், இதரக்கட்டணம் உள்ளிட்ட வருவாய் வழியாக ரூ.17 கோடியே 16 லட்சம் பெறப்பட்டுள்ளது.
  • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டார போக்குவரத்து அலு வலகத்தின் மூலம் கடந்த ஆண்டு ரூ.17.16 கோடி வரு வாய் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உட்பட்ட அரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட புதிய வாகனங்கள் என கடந்த ஆண்டு முடிவில் 8 ஆயிரத்து 515 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதிய ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல், நகல் மற்றும் இதர பரிமாற்றங்கள் 8 ஆயிரத்து 515 பேருக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் புதிய வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம், பதிவு புதுப்பித்தல், அபராதம், இதரக்கட்டணம் உள்ளிட்ட வருவாய் வழியாக ரூ.17 கோடியே 16 லட்சம் பெறப்பட்டுள்ளது.

அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, கடத்தூர், பொம்மிடி, சாமியாபுரம், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

இதில் கடந்த ஆண்டில் 827 சோதனை அறிக்கைகளின் படி வரி மற்றும் அபராதமாக ரூ.43 லட்சத்து 31 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

இது தவிர மற்ற மாவட்டங்களைச்சேர்ந்த வாகனங்களுக்கு ரூ.25 லட்சத்து 67 ஆயிரம் அபராதம் செலுத்த முன்மொழியப் பட்டுள்ளது.

வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள், கூடுதல் விளக்குகள், பம்பர்கள் அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர சாலை பாதுகாப்பு, விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Tags:    

Similar News