கும்பகோணம் பகுதியில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்
- நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
- கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சுவாமிமலை:
ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
விழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு வைத்து வழிபடுவர்.
அதேபோல், ஏராள மானோர் தங்கள் வீடுகளில் 5,7,9,11 ஆகிய எண்ணிக்கையிலான படிகள் அமைத்து விதவிதமான கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து பக்தி பாடல்கள் பாடி, அக்கம் பக்கத்தினர், உறவினர்கனை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்குவர்.
விழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பாபு ராஜபுரத்தில் பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ள தினேஷ் என்பவர் கூறுகையில்:-
கொலுவிற்கு தேவை யான பலவிதமான மண் பொம்மைகள், மர பொம்மைகள், பேப்பர் பொம்மைகள், 3 இன்ச் முதல் 7 அடி வரை உயரம் கொண்ட 63 நாயன்மார்கள் செட், தசவதார பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர், கொல்கத்தாகிலே பொம்மைகள், சமயபுரம் மாரியம்மன், சிவன்- பார்வதி, கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர் உள்பட பல்வேறு வகையான பொம்மைகள் ரூ.10 முதல் 7 ஆயிரம் வரை விற்பனைக்கு வைத்துள்ளேன்.
மேலும், இந்த பொம்மைகள் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை க்காக அனுப்பப்படுகிறது.
இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.