உள்ளூர் செய்திகள்

சுவாமிமலை பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தில் சட்டபேரவை ஏடுகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

சுவாமிமலை சிலைகள் தயாரிப்பு கூடத்தில் சட்டபேரவை ஏடுகள் குழுவினர் ஆய்வு

Published On 2022-12-21 10:16 GMT   |   Update On 2022-12-21 10:16 GMT
  • கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை வேண்டும்.
  • பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டு உள்ளது.

சுவாமிமலை:

சுவாமிமலை பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன், தலைமை கொறடா கோவி. செழியன், ஏடுகள் குழு உறுப்பினர்கள் செல்வம் எம்.எல்.ஏ, பொன்னுசாமி எம்.எல்.ஏ, நல்லதம்பி எம்.எல்.ஏ, மாவட்ட துணை கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவர் கம்பம் ராமகிருஷ்ணன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை கலைத்தட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட கைவினை படைப்புகளை பார்வையிட்டு இன்று பஞ்சலோக சிலைகள் தயாரிப்பு கூடத்தை ஆய்வு செய்தோம். ஆவின், எரிசக்தி, பூம்புகார் நிலையம், என அனைத்தையும் ஆய்வு செய்தோம்.

இதில் ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 88 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு அதில் 57 ஆயிரம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டு மீதி உள்ள பாலை முனையத்திற்கு அனுப்பப்படுகின்றன.

பசுக்கள் நல்ல முறையில் பராமரித்து தரமான கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பஞ்சலோக சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அருங்காட்சியங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

கைவினை கலைஞர்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கைவினை பொருட்களை உற்பத்தி செய்யும் கலைஞர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News