உள்ளூர் செய்திகள்

ஆேலாசனை கூட்டம் நடந்தது.

பாபநாசத்தில், பருத்தி விலை குறித்த ஆலோசனை கூட்டம்

Published On 2023-07-10 09:12 GMT   |   Update On 2023-07-10 09:40 GMT
  • பருத்தி விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
  • தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் விற்பனைக்குழு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை சார்பில் பருத்தி விலை நிலவரம் தொடர்பாக விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அரசு அலுவ லர்களுடனான கலந்த ஆலோசனை கூட்டம் பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தஞ்சாவூர் விற்பனைக்கு குழு செயலாளர் சரசு தலைமை வகித்தார்.

கூட்டத்தில் தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்

(வேளாண்மை) கோமதிதங்கம், பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டியன், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தாட்சாயினி, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் பிரியமாலினி, விற்பனை மேலாளர் சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்க. காசிநாதன், நாக. முருகேசன், கண்ணன், சுப்பிரமணியன், முரளிதரன், காதர் உசேன் மற்றும் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பருத்தி விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

நிகழாண்டு பருத்தி விளைச்சலும் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்ய முன் வந்தால் மட்டுமே விவசாயிகளை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.

இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.

உடனே வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News