உள்ளூர் செய்திகள்

தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 32 வாகனங்கள் பொது ஏலம்

Published On 2022-08-21 08:54 GMT   |   Update On 2022-08-21 08:54 GMT
  • ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் வரும் 26-ந்தேதி தேதியிலிருந்து விண்ணப்பக் கட்டணம் ரூ.500-யை தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தலாம்.
  • டேவணித் தொகை ரூ.10,000 வங்கி வரைவாக செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

தருமபுரி,

தருமபுரி வட்டாரப்போக்கு வரத்து அலுவ லகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டு உரிமைகோரப்படாத 32 வாகனங்களை பொது ஏலத்தில் விடப்படுகிறது.

இது குறித்து தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி வட்டாரப்போக்கு வரத்து அலுவலகத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட 32 வாகனங்களை அடுத்த மாதம் 20-ந்தேதி அன்று காலை 11 மணி அளவில் பொது ஏலக்குழு தலைவர் மற்றும் ஏலக்குழு உறுப்பினர் முன்னிலையில் ஏலம் விடப்படும்.

ஏலம் வாய்மொழி ஒப்பந்தபுள்ளி மூலமாகவும், மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்தபுள்ளி மூலமாகவும் இருமுறையில் நடத்தப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் வரும் 26-ந்தேதி தேதியிலிருந்து விண்ணப்பக் கட்டணம் ரூ.500-யை தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தி, GST உரிம நகலை சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஓப்பந்தப்புள்ளி விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 15-ந்தேதி மாலை 3 மணி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்த புள்ளிகளை தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் அலுவலக வளாகத்தில் அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்ப்பிக்க வேண்டும்.

டேவணித் தொகை ரூ.10,000 வங்கி வரைவாக செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நேரங்களில் 26 முதல் 15-09.2022 தேதி வரை உரிய அனுமதி பெற்று பார்வையிடலாம்.

பின்னர் 20.-ம் தேதி காலை 11- மணிக்கு பொது ஏல குழு தலைவர் மற்றும் ஏலக்குழு உறுப்பினர் முன்னிலையில் ஏலம் விடப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News