ஓசூரில், வள்ளலாரின் 200 வது பிறந்த நாளையொட்டி மொசைக் ஆர்ட்டில் அவரது உருவத்தை வடிவமைத்த தனியார் நிறுவன ஊழியர்
- 4 அடி உயரம் 2½ அகலம் உள்ள வள்ளலாரின் உருவப்படம் அனைத்தும் சிறு சிறு பேப்பர் துண்டு களால் ஆனது.
- மொசைக் ஆர்ட் என்ற கலை வடி வத்தில் லூகாஸ் வள்ளலார் படத்தை உருவாக்கி உள்ளார்.
ஓசூர்,
வள்ளலாரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் லூகாஸ் என்பவர் 5,000 சிறு சிறு பேப்பர் துண்டுகளை கொண்டு மொசைக் ஆர்ட்டில் வள்ளலாரின் உருவப்படத்தை வடிவ மைத்துள்ளார். திருவருட்பிரகாச வள்ள லார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் 1823 ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு ஆன்மீகவாதி, சத்திய ஞான சபையை நிறுவியவர், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடியவர், வள்ளலாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5- ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை நினைவு கூறும் வகையிலும், அவ ருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், ஓசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் வசித்து வரும் லூகாஸ் (33) என்ற தனியார் நிறுவன ஊழியர் 5,000 சிறு சிறு பேப்பர் துண்டுகளை கொண்டு மொசைக் ஆர்ட்டில் வள்ளலாரின் உருவப்படத்தை வடிவ மைத்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாக கடின உழைப்பால் இந்த உருவப்படத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
4 அடி உயரம் 2½ அகலம் உள்ள வள்ளலாரின் உருவப்படம் அனைத்தும் சிறு சிறு பேப்பர் துண்டு களால் ஆனது. மொசைக் ஆர்ட் என்ற கலை வடி வத்தில் லூகாஸ் வள்ளலார் படத்தை உருவாக்கி உள்ளார். நிறுவனத்தின் பணிகள் முடிந்த பின்னர் தனக்கு நேரம் கிடைக்கும்போது இந்த படத்தை உருவாக்கியதாக அவர் கூறினார்.