உள்ளூர் செய்திகள்

பந்தயத்தில் சீறிப்பாய்ந்து ஓடும் மாட்டு வண்டிகள்.

பேராவூரணியில், மாட்டு வண்டி எல்கை பந்தயம்

Published On 2023-02-06 08:21 GMT   |   Update On 2023-02-06 08:21 GMT
  • தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயமும் நடைபெற்றது.
  • 1 முதல் 4 இடம் பிடித்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.

பேராவூரணி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பேராவூரணி ஆவணம் சாலையில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தின் முதல் போட்டியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், சிங்கப்பூர் தொழிலதிபர் செல்வராசு, தென்னங்குடி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் க.அன்பழகன், அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி சதீஷ்குமார் மற்றும் பொன்காடு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெரிய மாடு பந்தயத்தில் 14 வண்டிகள், நடு மாடு பந்தயத்தில் 19, பூஞ்சிட்டு மாடு பந்தயத்தில் 47 வண்டிகள் பங்கு பெற்றது. அதனைத் தொடர்ந்து பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதில் 12 குதிரை வண்டிகள் ஓடியது. தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பந்தயம் நடைபெற்றது.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் பங்கேற்றது.

போட்டியில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாமிடம், நான்காவது இடத்தில் வந்த வண்டிகளுக்கு ரூ.3 லட்சம் பரிசுகள் வழங்கப்பட்டது.

கொடி பரிசாக ஆட்டு கிடா, செல்போன் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியை தனவேந்தன் ஒருங்கிணைத்தார்.

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பந்தயங்களை கண்டுகளித்தனர்.

Tags:    

Similar News