சேலம் ரெயில் நிலையத்தில் ஆர்.பி.எப் போலீசார் சோதனை
- (டிசம்பர் 6) நாடு முழுவதும் முக்கிய இடங்களிலும், ரெயில்வே ஸ்டேஷன்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
- இதனால், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
சேலம்:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி
(டிசம்பர் 6) நாடு முழுவதும் முக்கிய இடங்களிலும், ரெயில்வே ஸ்டேஷன்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உளவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதனால், அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ரெயில்வே ஸ்டேஷன்களில் ஆர்.பி.எப் போலீசார் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதன்படி, சேலம் ரெயில் நிலையத்தில் ஆர்.பி.எப் போலீசார் ரோந்து பணியில் ஈடுட்டு வருகிறனர். ரெயில்களில் மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தப்பட்டது. நுழைவு வாயிலில் தடுப்பு அமைத்து பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், மார்க்கெட், பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.