உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், மணிகண்ட ரதத்தில் எழுந்தருளிய அய்யப்பன்
- நாகநாத பிள்ளையார் கோவில் வாசலில் மணிகண்ட ரதம் தொடக்க விழா நடைபெற்றது.
- தொடர்ந்து ரதத்தில் ஐயப்பனுக்கு விசு கனி தரிசனம் நடந்தது.
தஞ்சாவூர்:
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஷூ கனியுடன் மணிகண்ட ரதத்தில் எழுந்தருளிய ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் தஞ்சாவூர் நாகநாத பிள்ளையார் கோவில் அருகே நடந்தது.
நாகநாத பிள்ளையார் சங்கடஹை சதுர்த்தி சொக்கனாவூர் ஐயப்ப சேவா சங்க கமிட்டியும் அகில பாரத ஐயப்ப சமாஜமும் இணைந்து விழாவை நடத்தின.
மேலவீதி கொங்கனேஸ்வரர் கோவில் எதிரில் நாகநாத பிள்ளையார் கோவில் வாசலில் மணிகண்ட ரதம் தொடக்க விழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ரதத்தில் ஐயப்ப சுவாமிக்கு விசு கனி தரிசனம் நடந்தது.
பின்னர் பிள்ளையாருக்கு சிறப்பு அபிசேகமும், அலங்காரமும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன், பிள்ளையார் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.