உள்ளூர் செய்திகள்

முகாமில் சிலம்பம் தஞ்சாவூர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணாவுக்கு கிரேடு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தஞ்சையில், தேசிய அளவிலான நடுவர்களுக்கான சிலம்ப பயிற்சி முகாம்

Published On 2023-01-31 08:19 GMT   |   Update On 2023-01-31 08:19 GMT
  • ஒவ்வொரு மாவட்ட சிலம்ப சங்க செயலாளர்கள் மேற்பார்வையில் கலந்து கொண்டனர்.
  • மாணவர்களுக்கான தனித்திறன் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை வின்னர் மல்டிமியூரல் அகாடமியில் சிலம்பம் இந்தியா சங்கம் சார்பில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான ஒரு நாள் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிலம்பம் இந்திய சங்கத்தின் தந்தை சந்திரமோகன், சிலம்பம் இந்திய சங்கத்தின் தலைவர் பொன்ராமர், செயல் தலைவர் கண்ணதாசன், பொதுச்செயலாளர் நாகராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்திய சிலம்ப சங்கத்தில் அங்கீகாரம் பெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் சிலம்ப பயிற்றுநர்கள் ஒவ்வொரு மாவட்ட சிலம்ப சங்க செயலாளர்கள் மேற்பார்வையில் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட போட்டிகள் முதல் அகில இந்திய போட்டிகள் நடத்துவதற்கான விதிமுறைகள், பயிற்றுனர், நடுவர்களுக்கான, உடை விதிமுறைகள், மாணவர்களுக்கான தனித்திறன் எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும், தொடு முறை பயிற்சிகளை எவ்வாறு நடத்தி தர வேண்டும் என்பது பற்றி ஆசிரியர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டு, 100 மதிப்பெண்களுக்கான எழுத்து தேர்வும் நடை பெற்றது.

தேர்வின் அடிப்ப டையில் பயிற்றுநர்களுக்கு கிரேடு சான்றிதழ் இந்திய சிலம்ப சங்க பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை சிலம்பம் தஞ்சாவூர் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணா செய்திருந்தார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர். முகாமின் செயல்முறைகள் மற்றும் வழிபாட்டு நிபந்தனைகள் தஞ்சையை சேர்ந்த ரெங்கநாயகி மற்றும் சங்கீதா ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.

Tags:    

Similar News