உள்ளூர் செய்திகள்

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் நேரில் ஆய்வு செய்த காட்சி.

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் டி.எஸ்.பி ஆய்வு

Published On 2023-01-26 10:14 GMT   |   Update On 2023-01-26 10:14 GMT
  • தைப்பூச திருநாள் தேரோட்டம் நடைபெறுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருநாள் அன்று தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
  • இதையடுத்து கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் நேரில் ஆய்வு செய்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்ரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தைப்பூச திருநாள் தேரோட்டம் நடைபெறுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருநாள் அன்று தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் நேரில் ஆய்வு செய்தார். தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் உள்ள இடையூறு கள், மின்கம்பிகள் செல்லும் பாதை, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பகுதிகள், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்தல் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் (பரமத்தி), சுப்பிரமணியம் (ஜேடர்பாளையம்), தனிப்பி ரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News