ஏற்காடு படகு இல்ல ஏரியில் விநாயகர் சிலை கரைப்பு
- ஏற்காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்காட்டில் உள்ள சுற்றுவட்டார பகுதியில் 21 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர்.
- பள்ளி குழந்தைகள் பள்ளி முடிந்தவுடன் தங்கள் வீடுகளில் வைத்திருந்த சிறிய சிறிய விநாயகர் சிலைகளை எடுத்து வந்து ஏற்காடு ஏரியில் கரைத்து மகிழ்ந்தனர்.
ஏற்காடு:
ஏற்காடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அங்குள்ள படகு இல்ல ஏரியில் கரைக்கப்பட்டன.
21 விநாயகர் சிலைகள்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்காட்டில் உள்ள சுற்றுவட்டார பகுதியில் 21 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். அந்த சிலைகளை 3 நாட்களில் கரைத்துவிட வேண்டும் என்று ஏற்காடு காவல் துறையினர் கூறியிருந்ததை தொடர்ந்து அந்த சிலைகளை தங்கள் பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து இன்று காலை முதல் மாலை 7 மணி வரை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையின் உதவியுடன் ஏற்காடு படகு இல்ல ஏரியில் பக்தர்கள் கரைத்தனர்.
பள்ளி குழந்தைகள் பள்ளி முடிந்தவுடன் தங்கள் வீடுகளில் வைத்திருந்த சிறிய சிறிய விநாயகர் சிலைகளை எடுத்து வந்து ஏற்காடு ஏரியில் கரைத்து மகிழ்ந்தனர். படகு இல்ல ஏரியில் சிலைகளை கரைத்ததால் அந்த சிலைகள் கரைப்பதை சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தவாறு பார்த்து ரசித்தனர். சிலைகளுடன் ஊர்வலமாக வந்த ஏற்காடு உள்ளூர் பொதுமக்கள் ஏரியின் கரையில் நின்று சிலை கரைப்பதை வேடிக்கை பார்த்தனர்.