கல்வித்துறை சார்பில் மண்டல அளவில் பெண்களுக்கான தடகளப் போட்டிகள்
- 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
- முதல், 3வது இடம்பிடித்த கீர்த்திகா, விஷ்ணுவர்தினிக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கல்வித்துறை சார்பில் மண்டல அளவில் பெண்களுக்கான தடகளப் போட்டிகள், ஊட்டி கார்டன் சாலையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தனியார், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதன் ஒருபகுதியாக வட்டெறிதல் போட்டியில் நஞ்சநாடு, கப்பத்தொரை ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியின் 9ம் வகுப்பு மாணவி கீர்த்திகா மண்டல் அளவில் முதலிடத்தையும், விஷ்ணுவர்தினி 3வது இடமும் பெற்றனர். குண்டு எறிதல் போட்டியில் கீர்த்திகா மீண்டும் முதலி டம் பிடித்தார். தடகள போட்டிகளில் முதல், 3வது இடம் பிடித்த கீர்த்திகா, விஷ்ணுவர்தினி ஆகியோருக்கு பரிசு, சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் ஸ்ரீகவிதா கனகராஜ், பள்ளி முதல்வர் ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.