ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்
- ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
- 2-வது நாளாக ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செம்பட்டி:
ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மத்திய அரசின் நிதி உதவியுடன் கனரக வாகனங்கள் வாங்கி வாடகைக்கு விட வேண்டும் என பல்நோக்கு சேவை திட்டத்தின் மூலம் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மேலும் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் இத்திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று 2-வது நாளாக ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள 11 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த சுமார் 25 பணியாளர்கள் சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமையில் ஆத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சங்கங்கள் மூடப்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறும் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.