உள்ளூர் செய்திகள்

மரக்காணம் அருகே நில தகராறில் விவசாயி மீது தாக்குதல்

Published On 2022-12-13 07:24 GMT   |   Update On 2022-12-13 07:24 GMT
  • கனகராஜ் என்பவருக்கும் செல்வகுமார் நிலம் எதிரே விவசாய நிலம் உள்ளது.
  • கனகராஜ் மண்வெட்டியால் செல்வ குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.

விழுப்புரம்:

மரக்காணம் அருகே கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 55) விவசாயி. இவருக்கு அதே பகுதியில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் கந்தாடு பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் செல்வகுமார் நிலம் எதிரே விவசாய நிலம் உள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயலினால் ஓரிரு இடங்களில் அதிகமாக மழை பெய்து ஏரி, குளங்கள் எல்லாம் நிரம்பி வயல்வெளிகளில் அதிகமான தண்ணீர் தேங்கியது. மரகாணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக தேங்கியது.

இதனால் செல்வகுமார் தனது வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வரப்புகளை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கனகராஜ் அவரது வயலில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த வரப்புக ளை சரி செய்ய முயன்றார். இதனால் செல்வ குமாருக்கும் கனகராஜு க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த கனகராஜ் தன் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் செல்வ குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த செல்வகுமார் மரக்கணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். மேலும் இதுகுறித்து செல்வகுமார் மரக்கணம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News