நாங்குநேரி அருகே கணவன் -மனைவி மீது தாக்குதல் தொழிலாளி கைது
- நாங்குநேரி அருகே உள்ள கீழக்காரங்காடு, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலி தொழிலாளி.
- இவருக்கும், இவரது தம்பி மாசானம் என்ற வெள்ளப்பாண்டிக்கும் (45) குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள கீழக்காரங்காடு, கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). கூலி தொழிலாளி.
இவருக்கும், இவரது தம்பி மாசானம் என்ற வெள்ளப்பாண்டிக்கும் (45) குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் முருகன், அதே ஊரில் உள்ள தனது தாயார் நம்பிநாச்சியாரிடம் சென்று சொத்து குறித்து பேசினார். பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அவரது தம்பி வெள்ளப்பாண்டிக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த முருகனின் மனைவி பிரேமா (45) தகராறை விலக்கி விட சென்றார். அப்போது வெள்ளப்பாண்டி பிரேமாவை மண்வெட்டியால் தாக்கினார். இதையடுத்து முருகன் அவரை தடுத்தார். ஆத்திரம் அடைந்த வெள்ளப்பாண்டி முரு கனையும் மண்வெட்டியால் தலையில் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயமடைந்த முருகன், அவரது மனைவி பிரேமா ஆகியோர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த மோதலில் வெள்ளப்பாண்டிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று திரும்பினார். இதுபற்றி முருகன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி, இது தொடர்பாக வெள்ளப்பாண்டியை கைது செய்தனர்.