உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையம் முன்பு அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

கடலூரில் அனைத்துக் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-28 09:05 GMT   |   Update On 2022-06-28 09:05 GMT
  • கடலூரில் அனைத்துக் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • பாசஞ்சர் ரெயில்களை மீண்டும் இயக்க கோரி நடைபெற்றது.

கடலூர்:

அனைத்துக்கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் காரைக்கால், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ெரயில்கள் மற்றும் கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்தில் உழவன், ராமேஸ்வரம், திருப்பதி எக்ஸ்பிரஸ் ெரயில்கள், விழுப்புரம், மயிலாடுதுறை அனைத்து பாசஞ்சர் ெரயில்கள் மீண்டும் இயக்க வேண்டும்.

கடலூர் முதுநகர் ெரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி காலை, மாலை ெரயில்கள் இயக்க வேண்டும். புதுவை, சென்னை ெரயிலுக்கு இணைப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போராட்டம் அறிவித்தவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என போராட்டம் செய்பவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இன்று காலை கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில குழு உறுப்பினர் குளோப், தி.க மாவட்ட தலைவர் சிவக்குமார், குடியிருப்போர் சங்க பொதுச் செயலாளர் மருதவாணன், விடுதலை வேங்கைகள் மாநில செயலாளர் வெங்கடேசன், மக்கள் அதிகாரம் பாலு, மாநகராட்சி கவுன்சிலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News