உள்ளூர் செய்திகள்

பொதுமக்களை கவரும் சுவர் ஓவியங்கள்

Published On 2023-02-14 04:07 GMT   |   Update On 2023-02-14 04:07 GMT
  • தெற்கு உழவர் சந்தை வளாகத்தின் சுற்றுச் சுவர்களில் ஓவியங்கள் வரையும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • வாடிக்கையாளர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளதுள்ளதுடன் ஓவியங்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு துறைக்குச் சொந்தமான கட்டிடங்களின் சுவற்றில் விளம்பரங்கள், போஸ்டர் ஒட்டுதல் போன்ற செயல்களால் அவை அலங்கோலமாக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, மாநகராட்சி நிர்வாகம் நகரப் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்களில் சுவர்களில், உரிய அலுவலகங்கள் தொடர்புடைய விதமான ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தவும், விளம்பரங்களால் சுவர்கள் அசிங்கப்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாகவும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.

அவ்வகையில் மாநகராட்சி மைய அலுவலகம் உள்ளிட்டவற்றிலும் மாநகராட்சி பள்ளிகளின் சுற்றுச் சுவர்களிலும், ஓவியங்கள் வரையும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பகுதியில் உள்ள தெற்கு உழவர் சந்தை வளாகத்தின் சுற்றுச் சுவர்களில் தற்போது ஓவியங்கள் வரையும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உழவர் சந்தை நடவடிக்கைக்கு ஏற்ப விவசாயப் பணிகள், வேளாண் உற்பத்தி காய்கறி, பழ வகைகள் ஆகியன இந்த சுவர்களில் ஓவியங்களாக வரையப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் இது போன்ற நடவடிக்கை உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளதுள்ளதுடன் ஓவியங்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

Tags:    

Similar News