உள்ளூர் செய்திகள்

 வாகனங்களை ஏலம் எடுத்தவர்கள் ஓட்டி சென்ற காட்சி.

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 132 வாகனங்கள் ஏலம்

Published On 2023-03-07 09:50 GMT   |   Update On 2023-03-07 09:50 GMT
  • கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
  • அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது.

சேலம்:

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவின் அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் என்று கடந்த 28-ந் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுத படை மைதானத்தில் இன்று பொது ஏலம் விடப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் கென்னடி, காலால் உதவி ஆணையர் மாறன் உள்ளிட்டோர் தலைமையில் இந்த ஏலம் நடந்தது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்ட 2, 3, 4 சக்கர வாகனங்களில் மொத்தம் 132 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

அரசு பணிமனை பொறியாளர் மதிப்பீட்டின்படி இந்த வாகனங்களுக்கு குறைந்த பட்ச தொகை நிர்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் வாகனங்களை எடுப்ப தற்காக முன் பணம் கட்டிய 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஏலம் விடப்பட்ட வாகனங்களை அவரவர் விருப்பத்திற்கேற்ற வாறு ஏலத்தில் வாகனத்தை எடுத்து மீதி தொகையும் செலுத்திவிட்டு வாக னங்களை வாங்கி சென்றனர்.

Tags:    

Similar News