உள்ளூர் செய்திகள்

திருப்பூா் மாவட்ட காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட 17 வாகனங்கள் ஏலம் 27-ந்தேதி நடக்கிறது

Published On 2023-02-15 06:40 GMT   |   Update On 2023-02-15 06:40 GMT

திருப்பூர்:

திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட காவல் துறையால் பயன்படுத்தப்பட்ட 7 நான்கு சக்கர வாகனங்கள், 10 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 17 வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களுக்கான பொது ஏலம் காங்கயம் சாலை நல்லிகவுண்டன் நகரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ள நபா்கள் நுழைவுக்கட்டணமாக ரூ.100, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1,000 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,000 முன்பணமாக செலுத்தி தங்களது பெயரை ஆதாா் அட்டையுடன் பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏலத்தில் பங்கேற்பவா்களுக்கு ஆயுதப்படை மைதானத்தில் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் பிப்ரவரி 26 ஆம் தேதி வரையில் ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகையை ஜிஎஸ்டி வரியுடன் சோ்த்து ரொக்கமாக செலுத்த வேண்டும். ஏல ரசீது எந்தப் பெயரில் பெறப்படுகிறதோ அதே நபா் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஆயுதப்படை காவல் ஆய்வாளரை நேரிலோ அல்லது 95668-88041, 87540-30229 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News