நெல்லை மாவட்ட மதுவிலக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்- வருகிற 24-ந்தேதி நடக்கிறது
- மதுவிலக்கு குற்றவழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்கள் வருகிற 24-ந்தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது.
- வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ஒரு வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடை மையாக்கப்பட்ட 34 மோட்டார் சைக்கிள்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையம் அருகே உள்ள மது விலக்கு அமலாக்கப் பிரிவு வளாகத்தில் வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படுகிறது. இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முன்னீர் பள்ளத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ள லாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினமே ஒரு வாகனத்திற்கு ரூ.2 ஆயிரம் முன் பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும் தங்கள் பெயரை பதிவு செய்யும்போது தங்களது ஆதார் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல் கொண்டு வர வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப் படுவார்கள். ஏலம் எடுத்த வுடன் முழுத் தொகை மற்றும் அரசால் விதிக்கப் படும் ஜி.எஸ்.டி. சேர்த்து முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.