உள்ளூர் செய்திகள் (District)

பண்ருட்டிபோக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் ஆட்டோ டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பண்ருட்டியில் விதிகளை மீறும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும்:போலீசார் எச்சரிக்கை

Published On 2023-06-17 09:18 GMT   |   Update On 2023-06-17 09:18 GMT
  • ஆட்டோக்களால் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினர் அதிக அளவு புகார்கள் கூறியிருந்தனர்.
  • ஸ்டிக்கர் ஒட்டப்படாத ஆட்டோக்கள் இயக்கக் கூடாது.

கடலூர்:

பண்ருட்டியில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்கு வரத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பண்ருட்டி முக்கிய சாலை சந்திப்பு, ராஜாஜி சாலை, பஸ்வெளியே வரும் வழி, உள்ளிட்ட முக்கிய இடங்களில் விதிகளை மீறி நிறுத்தப்படும் ஆட்டோக்களால் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினர் அதிக அளவு புகார்கள் கூறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் எஸ்.பி, பண்ருட்டி டி.எஸ்.பி. ஆகியோர் உத்தரவுபடி பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவிலில் பண்ருட்டி போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களையும் அழைத்துப் பேசினார்.

போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக் குமார், சண்முகராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் அனைத்து ஆட்டோக்களிலும் போக்கு வரத்து போலீஸ் சார்பில் வழங்கப் பட்டுள்ள ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும். ஸ்டிக்கர் ஒட்டப்படாத ஆட்டோக்கள் இயக்கக் கூடாது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடை யூறாக சாலை களில் ஆட்டோவை நிறுத்தி அதிக அளவுபயணிகளை ஏற்றி செல்லக்கூடாது. யூனிபார்ம்கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்கள்.

Tags:    

Similar News