மழை முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது.
- அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ மழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் ஆவணி பெருவிழா கடந்த 3 ம் தேதி காப்புகட்டி பூச்சொரிதலுடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது.
30அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.
முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், திரவிய 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது .
தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.