- ஊட்டியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
- விருதுகளை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர்கள், தலைமையாசிரியர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம் மற்றும் சிறந்த முதல்வர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, ஊட்டியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பார்த்தசாரதி தலைமை வகித்தார். கோவை கற்பகம் பல்கலைக்கழக சிறப்பு பயிற்றுநர் ஆதிபாண்டியன், பல்கலைக்கழக கல்வித்துறை பேராசிரியர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறந்த முறையில் பணியாற்றி வரும் முதல்வர்களுக்கான விருதுகளை மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் சாரண இயக்கம் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பற்றி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷன் பேசினார். நிகழ்ழ்சியில் மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள், கப்பத்தொரை ஸ்ரீ ராம கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி செயலாளர் மற்றும் இயக்குநர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.