விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
- 5 பிரிவுகளில் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
- வருகிற 21-ந் தேதி விளையாட்டு அரங்கில், பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கடந்த 2022-2023-ம் ஆண்டின் முதல் அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 7-ந் தேதி முதல் பிப்ரவரி 27-ந் தேதி வரை பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவு என 5 பிரிவுகளில் பல்வேறு வகையான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வருகிற 21-ந் தேதி மாலை 3.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் ஆகியோரால் வழங்கப்பட உள்ளன. முதல் அமைச்சர் கோப்பைக்கான தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் தவறாது பரிசளிப்பு விழாவில் மாலை 3.30 மணிக்கு கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.