கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற மாணவ -மாணவிகளுக்கு கேடயம் வழங்கல்
- பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டது
- மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை அறிவுறுத்தப்பட்டு உள்ளது
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 390 மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்க ளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவ ரத்தை அறிவுறுத்தப்பட்டு உள்ளது .
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர் கவின்மிகு தஞ்சை இயக்கம், அரசினர் மேல்நிலைப்பள்ளி திருமங்கலகோட்டை, கீழையூர், அறகானூயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை முனைவர் சதீஷ்குமார் ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது மற்றும் தலா ரூ 1,00,000 -க்கான காசோலை வழங்கினார்.
பின்னர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில முதியோர்கள் நலன் பாதுகாப்பில் இளைய சமுதாயத்தினரின் பங்கு என்ற தலைப்பில் நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.