காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு
- சீர்காழியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- இதில் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு செயலி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதுடன் அவர்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கடை வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அங்கிருந்த மாணவ-மாணவிகள் மற்றும் பெண்களுக்கு காவலன் செயலி குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதுடன் அவர்களது கைப்பேசியில் காவலன் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை இயக்கும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் போலீசார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதே போல் சீர்காழி போலீசார் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லைநடராஜன், சிதம்பரம் ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் காவலர் செயலி குறித்து விளக்கமளித்து காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.