மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து விழிப்புணர்வு
- கல்லூரி, பள்ளிகளில் சிறுதானியம், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
திண்டுக்கல்:
இந்தியாவில் இந்த ஆண்டு சிறுதானிய உணவுப்பொருள் ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சிறுதானிய உணவு பொரு ட்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கல்லூரி, பள்ளிகளில் சிறுதானியம், பாரம்பரிய உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுதானியங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் மாணவ-மாணவிகள் உடல் வலிமை யுடனும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாகவும் மாறுவார்கள் என எடுத்து ரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மேற்கு ரதவீதி மாநகராட்சி தொடக்க ப்பள்ளியில் இன்று சிறுதானிய உணவு பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இதில் கம்பு, சோளம், கேழ்வரகு, ராகி உள்ளிட்ட தானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் தயார் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாண வர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். சிறுதானியங்கள் என்றாலே கூழ், கஞ்சி என்ற எண்ணத்தை மாற்றி இந்த தானியங்களிலும் பல்வேறு நவீன உணவுகளை தயாரி க்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஏற்படும் பயன்கள் குறித்து தங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி இதனை பயன்படுத்துமாறு தெரி வித்தனர். இதுமட்டுமின்றி செம்பருத்தியால் செய்த உணவு உள்பட பாரம்பரிய உணவுகள் குறித்தும் காட்சிப்படுத்த ப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியை ஜெயந்தி புளோரன்ஸ் மற்றும் ஆசிரி யர்கள் இதற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.