உள்ளூர் செய்திகள்

கிராம உதயம் அமைப்பின் இயக்குநர் சுந்தரேசன் பேசிய போது எடுத்த படம்.

ஆறுமுகநேரியில் பெற்றோர், மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

Published On 2022-10-14 09:08 GMT   |   Update On 2022-10-14 09:08 GMT
  • அரசு பள்ளிகளில் சிறந்த கல்வி கற்பதற்கு பெற்றோர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம்
  • கிராம உதயம் அமைப்பின் சார்பில் நடந்த முகாமை அமைப்பின் நிறுவனர் டாக்டர் சுந்தரேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஆறுமுகநேரி:

அரசு பள்ளிகளில் சிறந்த கல்வி கற்பதற்கு பெற்றோர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் கல்வி தரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் கைபேசியை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.

கிராம உதயம் அமைப்பின் சார்பில் நடந்த முகாமை அமைப்பின் நிறுவனர் டாக்டர் சுந்தரேசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.மேல ஆழ்வார்தோப்பு கிளை அலுவலர் வேல்முருகன் முன்னிலை வகித்தார்.பகுதி பொறுப்பாளர் ஆறுமுகவடிவு வரவேற்று பேசினார்.தனி அலுவலர் ராமச்சந்திரன், சிறப்பு பொறுப்பாளர் சித்திரை பெருமாள், பகுதி பொறுப்பாளர்கள் பிரேமா, முத்து செல்வன் ஆகியோர் பயிற்சி வகுப்புகளை நடத்தினர். தன்னார்வ தொண்டர் லிஜியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News