உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவிய போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகள்.

குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் விழிப்புணர்வு போட்டிகள்

Published On 2023-06-25 08:37 GMT   |   Update On 2023-06-25 08:37 GMT
  • நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
  • 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.

நெல்லை:

நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட அறிவியல் மையத்தில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணை ஆணையர் சுமதி, உதவி ஆணையர் முருக பிரசன்னா, மாவட்ட அறிவியல் மைய அலுவலர் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் நடைபெற்றது. இதில் ஒரு பள்ளியில் 2 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

9 முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பேச்சுப்போட்டியும் நடைபெற்றது. பேச்சு போட்டியானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 2 பிரிவாக நடத்தப்பட்டது. இதில் ஒரு பள்ளியில் ஒரு மாணவர்்் மட்டுமே கலந்து கொண்டு 4 நிமிடங்கள் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 46 பள்ளிகளில் இருந்து வந்த மாணவ-மாணவிகள் தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.

முடிவில் ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இன்று நடந்த போட்டிகளில் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய கல்வி அலுவலர் லெனின் செய்திருந்தார்.

Tags:    

Similar News