உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

Published On 2023-01-20 09:58 GMT   |   Update On 2023-01-20 09:58 GMT
  • 3 நாட்களில் 300 கி.மீ. தூரம் பயணம் செய்ய உள்ளோம்.
  • சைக்கிளில் சென்று பார்க்கும் போது பாரம்பரிய சின்னங்களுடன் நமக்குள்ள ஈர்ப்பு அதிகமாகும்.

தஞ்சாவூர்:

சென்னையை சேர்ந்த சைக்கிளிங் யோகிஷ் குழுவை சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பாரம்பரிய இடங்களில் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு அந்தந்த பகுதியில் உள்ள பாரம்பரிய சின்னங்கள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன்படி 11-வது ஆண்டாக இன்று தஞ்சையில் இருந்து அந்த குழுவை சேர்ந்த 60 பேர் தங்களது பயணத்தை தொடங்கினர். இந்த சைக்கிள் பயணத்தை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பயணமானது தஞ்சையில் இருந்து புறப்பட்டு கடலூர் மாவட்டம் வீராணம் நோக்கி சென்றது.

இதுகுறித்து சைக்கிளிங் யோகிஷ் குழுவை சேர்ந்த ராமானுஜம் கூறும்போது:-

நாங்கள் ஆண்டு தோறும் பாரம்பரிய சின்னங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு தஞ்சையில் எங்களது பயணத்தை தொடங்கி உள்ளோம். 3 நாட்களில் 300 கி.மீ. தூரம் பயணம் செய்ய உள்ளோம்.

இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் டிரேயில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் எங்களது விழிப்புணர்வு சைக்கிள் பயணம் அமைந்துள்ளது. முதல் நாளானஇன்று தஞ்சையில் இருந்து வீரா ணத்துக்கு செல்கிறோம். அங்கு பொன்னியின் செல்வன் தடம் பதித்த இடங்களை பார்த்து மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறோம்.

கார், மோட்டார் சைக்கிள், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று பாரம்பரிய சின்னங்களை பார்ப்பதை விட சைக்கிளில் சென்று பார்க்கும் போது பாரம்பரிய சின்னங்களுடன் நமக்குள்ள ஈர்ப்பு அதிகமாகும். சைக்கிளில் செல்லும் போது சுற்றுச் சூழலுக்கும் கேடு கிடையாது. உடலுக்கும் ஆரோக்கியம்.

முதல் நாளான இன்று வீராணத்துக்கு செல்கிறோம். நாளை 2-ம் நாளாக பயணமாக நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு செல்ல உள்ளோம். 3-ம் நாள் தஞ்சை மாவட்டம் திருவையாறு, திங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்கிறோம். இந்த மூன்று நாள் பயணத்தில் பல்வேறு பாரம்பரிய இடங்களை பார்த்து மற்றவர்களுக்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

சோழர்கள் வாழ்ந்த இடங்கள் குறித்தும் தெரியப்படுத்துகிறோம். எங்களது சுற்று பயணத்துக்கு தமிழ்நாடு சுற்று லாத்துறை மிகவும் உறுது ணையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News