- விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக சென்றனர்.
- விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைப்பெற்றது.
மாவட்ட குற்றவியல் நீதிபதி கார்த்திகா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக நின்றனர்.
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து குழத்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி, மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தா தேவி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.