உள்ளூர் செய்திகள்

உதவி பேராசிரியர் மருத்துவர் ரத்தின பிரகாஷ் பேசிய போது எடுத்த படம்.

எஸ்.தங்கப்பழம் கல்லூரியில் கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-04-21 08:42 GMT   |   Update On 2023-04-21 08:42 GMT
  • மருத்துவக் கல்லூரி உதவி முதல்வர் டாக்டர் பாரதி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.
  • கல்லீரல் நோய்க்கான உணவு முறைகள் குறித்து மாணவிகள் ஸ்வேதா, வைஷ்ணவி ஆகியோர் உரையாற்றினர்.

சிவகிரி:

வாசுதேவநல்லூர் எஸ். தங்கப்பழம் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் "உலக கல்லீரல் தினத்தை" முன்னிட்டு கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எஸ். தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ். தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி. முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். மருத்துவக் கல்லூரி உதவி முதல்வர் டாக்டர் பாரதி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லீரல் நோய்கள் பற்றியும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகள் பற்றியும் கல்லூரி உதவி பேராசிரியர் மருத்துவர் ரத்தின பிரகாஷ் உரையாற்றினார். கல்லீரல் நோய்க்கான யோகா, உணவு முறைகள் குறித்து முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவிகள் ஸ்வேதா, வைஷ்ணவி ஆகியோர் உரையாற்றினர்.

இதில் மருத்துவ கல்லூரியின் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ கல்லூரியின் அனைத்து மாணவ மாணவிகள், உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News