உள்ளூர் செய்திகள்
முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- வரையாடு உருவம் போல மனிதசங்கிலி நடத்தப்பட்டது
- மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பகம், முக்குருத்தி வனச்சரகம் சார்பில் நீலகிரி வரையாடுகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ஓவியம், பேச்சு, வினாடி-வினா மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வனப்பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்புடன் வரையாடு உருவம் போல மனிதசங்கிலி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட வனஅலுவலர் கவுதம், மாணவர்களிடம் வரையாடு தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.