கயத்தாறில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
- நிகழ்ச்சியில் கல்வித்துறையில் முன்னேற்றம், இலவச சட்ட முகாம்கள் உள்ளிட்ட அம்சம்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
- இதில் சிறப்பு அழைப்பாளராக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கயத்தாறு:
கயத்தாறில் அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் தேரடி வீதியில் இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இளைஞர்கள் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவரும், நிறுவன தலைவருமான மணக்கரை பேச்சிமுத்து தலைமை தாங்கினார்.
மாநில இளைஞரணி செயலாளர் கல்லூர் கார்த்திக் பாண்டியன், வக்கீல் பிரிவு செயலாளர் முத்து, மாநில கொள்கை பரப்பு செயலாளர் கென்னடி, தென் மண்டல செயலாளர் முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பூல்பாண்டியன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் இளைஞ ர்களுக்கு எவ்வாறு படிக்க வேண்டும்?. கல்வித்துறையில் முன்னேற்றம், இலவச சட்ட முகாம்கள் உள்ளிட்ட அம்சம்கள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட செயலாளர் வக்கீல் மகேஷ், கவுரவ சட்ட ஆலோசகரும், மதுரை உயர்நீதிமன்ற வக்கீலுமான ஆனந்த முருகன், மாநில மகளிர் அணி செயலாளர் ரேணுகா தேவி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஈஸ்வரி, நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் விக்கி, மாவட்ட துணைச் செயலாளர் காசிபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் நெல்லை சட்ட ஆலோசகர் முருகன், தூத்துக்குடி இளைஞர் அணி செயலாளர் கருப்பசாமி, மாவட்ட செயலாளர்கள் முத்துராமலிங்கம் (மதுரை), கோபிநாத் (சிவகங்கை), நெல்லை வக்கீல் அணி செயலாளர் அருணாச்சலம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ஐகோர்ட் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கத்தினர் செய்திருந்தனர்.