பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- பள்ளி மாணவர்கள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர்.
- பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றி காலில் சக்கரம் மாட்டி சென்றனர்.
பேராவூரணி:
பேராவூரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாலுகா அலுவலகத்தில் விழிப்பு ணர்வு பேரணியை அட்லா ண்டிக் பன்னாட்டு பள்ளி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் சிலம்புச்செல்வன் தலைமையில் புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி சேதுசாலை, அண்ணா சாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை வழியாக நகரின் முக்கிய வீதியில் சென்று புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
பள்ளி மாணவ-மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்போம், மஞ்சள் பையை கையில் எடுத்து செல்வோம் என முழக்கங்கள் எழுப்பினர். பேராவூரணி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர்கள் சாமியப்பன், நிமல் ராகவன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். பெரியார் சிலை அருகில் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக மாணவர்கள் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் சுற்றினர். பேரணியில் மாணவர்கள் காலில் சக்கரம் மாட்டி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களைபொது மக்களிடம் வழங்கினர்.